வலைப்பதிவு ஊடகம் தொழில் சர்வதேச நோயாளிகள் கண் பரிசோதனை
மீண்டும் அழைப்பைக் கோருங்கள்

கண்புரை (கேடராக்ட்) அறுவை சிகிச்சை

அறிமுகம்

கண்புரை அறுவை சிகிச்சை என்றால் என்ன?

கண்ணுக்குள் இருக்கும் இயற்கையான க்ரிஸ்டலைன் லென்ஸ் மங்கலாகி விடுவதுதான் மிகவும் பிரபலமான கண் நோயான ‘கண்புரை’ (Cataract) என்பது. இதன் காரணமாக கண்பாதை தடிபட்டு உங்களது பார்வையைக் குட நீங்கள் இழக்க நேரிடலாம். ‘மோதியாபிந்து’ (Motiyabindoo - கண்புரை) என்பது பெரும்பாலும் முதியோர்களை தாக்கும்; ஆயினும் இது குழந்தைகளையும் பாதிக்கலாம். சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால் இதனால் பார்வை முழுவதுமாகவும் பறிபோய்விடலாம்.

அதிருஷ்டவசமாக, கண்நோயை உண்டாக்கும் குருட்டுத்தன்மையை மாற்றிவிட முடியும். உங்களது வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளில் மங்கலான பார்வை குறுக்கிடும்போது, கண் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, பின்னர் . ‘மோதியாபிந்து’ (Motiyabindoo - கண்புரை) அறுவை சிகிச்சையை செய்து கொள்ளலாம். மேலும், கண்புரை அறுவை சிகிச்சையை செய்து கொள்வதை தாமதப்படுத்தினால் உயர் கண் ரத்த அழுத்தம், ஆப்டிக் டிஸ்க் சேதமடைவது, க்ளூகோமா போன்ற பிற கோளாறுகள் உருவாகவும் வழிபிறக்கும்.

கண்புரை அறுவை சிகிச்சையை சரியான நேரத்தில் செய்து கொள்ளுமாறு ஆலோசனை தரும் உங்களது டாக்டர் அறுவைச் சிகிச்சையையும் செய்வார். கண்புரை அறுவை சிகிச்சையை செய்து முடிக்க மொத்தமே 20-30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மருத்துவமனையில் இரவு தங்க வேண்டிய அவசியமே இராது.

கண்புரை அறுவை சிகிச்சைக்கு எப்படி தயார் செய்து கொள்வீர்கள்?

  • கண்புரை அறுவை சிகிச்சைக்கு உடல், உணர்வு, உளவியல் ரீதியான முன்னேற்பாடுகளும் நிதியுதவியும் தேவை. கண்புரை அறுவை சிகிச்சை தொடர்பான ஆலோசனை பெறும்போது உறவினர் (அ) ஒரு நெருங்கிய நண்பருடன் சென்றால் நல்லது. கண்புரை சிகிச்சைக்கான சரியான வகையான லென்ஸை தேர்வு செய்யும் முடிவெடுக்கவும் இது உதவும்.
  • கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன், மருத்துவர் ஒருவரிடம் சென்று உடல் பரிசோதனை செய்து உடலின் செயல்பாடு மற்றும் பொதுவான அலகுகளான இரத்த அழுத்தம், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ECG ஆகியவை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யவும்.
  • அறுவை சிகிச்சைக்கு முன்பு உண்பதற்கு சிலவகை மருந்துகளை உமது கண் மருத்துவர் உமக்குப் பரிந்துரைக்கலாம்.

 

கண்புரை அறுவை சிகிச்சைக்கு முன்னர்

  • அறுவை சிகிச்சைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் எவ்வித திரவ, திட உணவையும் உட்கொள்ள வேண்டாமென உமது கண் மருத்துவர் உமக்குப் பரிந்துரைக்கலாம்.
  • தொற்று அபாயத்தை குறைக்க அறுவை சிகிச்சைக்கு 1 நாள் முன்னர் ஆண்டிபயாடிக் ஐ ட்ராப்களை (antibiotic eye drops) விட்டுக் கொள்ளுமாறு உங்களுக்குப் பரிந்துரைக்கலாம்.
  • கண்புரை அறுவை சிகிச்சை நாளில் உங்களுக்கு துணையாக உங்களது உறவினர்/நண்பர் யாராவ்து அருகிலிருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். உளவியல் சார்ந்த உதவியாகவோ, விண்ணப்பம் பூர்த்தி செய்யும் உதவியாகவோ ஒப்புதல் தருவதற்காகவோ இது இருக்கலாம். இதனால் சிகிச்சை முடிந்தபின் எவ்வித பிரச்சினையுமின்றி வீடு திரும்ப உங்களுக்குப் பேருதவியாக இருக்கும். 

 

கண்புரை அறுவை சிகிச்சையின்போது

கண்புரை அறுவை சிகிச்சை என்பது துரிதமாக செய்யப்படும் நிகழ்முறை; மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல், சிகிச்சை முடிந்த ஒருமணி நேரத்துக்குப் பின்னர் அன்றே உங்களால் வீடு திரும்ப முடியும். சிகிச்சைக்காக வருவது முதல் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவது வரை 2-3 மணிநேரங்களில் அனைத்துமே முடிந்து விடும்.

 

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர்

  • பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் பயன்படுத்தி, தரப்படும் அறிவுரைகளின்படி நடக்கவும். மருத்துவமனைக்கு வந்து ஒப்புதல் பெறாமல் வேறெந்த மருந்துகளையும் உட்கொள்ளாதீர்கள்.
  • அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண்ணில் வலி, வெளிச்சத்தால் கண்கூசுதல், நீர் வடிதல் அல்லது சிவப்பாவது போல் இருந்தால் இதை உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • தொடர் சிகிச்சைக்கு மருத்துவமனை செல்வதை தவிர்க்காதீர்கள்.

 

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கண்ணைப் பராமரிப்பது

  • கைகளால் உங்களது கண்களைத் தொடுவதை தவிர்க்கவும்.
  • ஒவ்வொரு நாளும் கழுத்துக்குக் கீழுள்ள பகுதியை மட்டும் தேய்த்துக் குளிக்கவும்; 10 நாட்கள் வரை ஷேவிங் செய்யாமல் இருக்கவும்.
  • கொதிக்கும் நீரில் பஞ்சை 10 நிமிடங்க்கள் வரை வைக்கவும். பின்னர் அது சில்லென்று ஆனவுடன், சுத்தமான கைகளால் பஞ்சை அழுத்தி வரும் நீரால் இமைகளையும் கண்ணின் ஓரங்களையும் சுத்தம் செய்து வரவும்.
  • மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனபின் குறைந்தபட்சம் 8 நாள் வரை தூசி அதிகமுள்ள பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும்.
  • இரண்டு வாரங்கள் வரை கண்ணாடி அணிந்து உங்களது கண்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்.
  • குழந்தைகள் அருகில் இருந்தால் மிகவும் கவனமாக இருக்கவும்; அவர்கள் கண்ணருகில் வந்து பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
  • கனமான பொருட்களைத் தூக்காமல், மிகவும் முக்கி மலம் கழிக்காமல் இருக்கவும். மலச்சிக்கல் ஏற்பட்டால், மருத்துவரை சென்று பார்க்கவும்.
  • ஓரிரண்டு நாட்கள் வரையிலாவது படிக்காமல் (அ) தொலைக்காட்சி பார்க்காமல் இருக்கவும்.
  • படுக்கையின் ஒருபுறமாகப் படுப்பதை (குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண் இருக்கும் பக்கம்) 2-3 நாட்கள் வரை தவிர்க்கவும்.

 

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின் உடல் தேர்ச்சி பெறுதல்

கண்புரை அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் பார்வைத்திறன் மேமபடுவதற்கு அறுவை சிகிச்சை முடிந்து குறைந்தது சிலமணி நேரங்களாவது ஆகும். ஆனால் சிகிச்சை முடிந்த பின்னர் சில வாரங்கள் வரை சில முன்னெச்சரிக்கைகளை நோயாளி கடைப்பிடித்தாக வேண்டும். சிகிச்சைக்குப் பின்னர் வேறெந்த பக்க விளைவு (அ) சிக்கல்கள் எழாமல் இருக்க இது பயனுள்ளதாக இருக்கும்.

 

கண்புரை அறுவை சிகிச்சையின் பக்க விளைவுகள்

கண்புரை அறுவை சிகிச்சை பாதுகாப்பானதாக, வெற்றியடைய வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்குமாறு உள்ளது என்றாலும் இதுவும் மற்ற அறுவைச் சிகிச்சை போலத்தான். இதற்கென சில பக்க விளைவுகளும் சிக்கல்களும் தோன்றாமல் இருக்காது.  

அறுவை சிகிச்சையின்போது, பின்புற லென்ஸ் காப்ஸ்யூல் உடைந்து மங்க்கலான லென்ஸின் உடைந்த பாகங்கள் லென்ஸுக்கு பின்னாலிருக்கும் உடலுக்குள் நுழையலாம். எனவே, இன்னொரு முறை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய தேவை இருக்காது.

கண்புரை அறுவை சிகிச்சை நடைபெறும்போது சில நேரங்க்களில் கண்ணுக்குள் இரத்தம் வடியலாம்.

 

கண்புரை அறுவை சிகிச்சையுடன் தொடர்பான அபாயங்கள் & சிக்கல்கள்

  • கண்ணுக்குள் தொற்று ஏற்படுதல்
  • கண்ணுக்குள் கண் பொங்கி விடுதல்
  • கண் அழுத்தம் அதிகரித்தல்
  • கார்னியா உள்ளிட்ட இடங்கள் சிறிது நேரம் வரை மங்கலாகுதல்
  • ரத்தத்தை நீர்க்க வைக்கும் மருந்துகளால் கண்பகுதி கறுப்பாக ஆகுதல் (அ) காயம் பட்டது போல் தெரியுதல்
  • ரெடீனா தனியாக வந்து விடுவது
  • க்ளூகோமா (Glaucoma)
  • இன்ட்ரா-ஆகுலர் லென்ஸ் (intraocular lens) சிறிதான அளவில் (அ) முழுமையாக நகர்ந்து விடுதல்
  • கண்ணிமைகள் சுருங்குதல் (ப்டோசிஸ் - Ptosis)

 

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் (அணியவேண்டிய) கண்ணாடி

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கண்ணாடி அணிந்தால் பிரச்சினை இல்லை என நினைக்கும் நோயாளிகள் தமது அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மோனோ-ஃபோகல் கண்ணாடிகளைத் தேர்ந்தெடுத்து அணியலாம். பெயரில் இருப்பது போல் இவ்வகை செயற்கை லென்ஸ்களில் ஒரு குவியப்புள்ளி மட்டுமே இருக்கும்: அதாவது கிட்டப்பார்வை (அ) தூரப்பார்வை (அ) அருகாமை பார்வை. எனினும், தற்போது இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் காரணமாக கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின் கண்ணாடிகளை பெரிதும் நம்பியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. பல குவியங்கள் (அ) முக்குவியம் உள்ள லென்ஸ்களால் கண்ணாடியை சார்ந்திருப்பதை முழுதும் தவிர்க்கலாம். உங்களது கண் மருத்துவரிடம் இவ்வகை IOL-கள் பற்றிய தேர்வு தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தி பின்னர் பொருத்தமானதை தேர்ந்தெடுக்கவும்.

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சிறியளவிலான கண் கோளாறுகள் இருப்பது ஒருவேளை தெரியவந்தால், அதற்காக கண்ணாடி அணிய வேண்டிய சூழலும் உங்களுக்கு ஏற்படலாம்.

கண்புரை அறுவை சிகிச்சை நடைமுறைகள்

பாகோஎமல்சிஃபிகேஷன்

கார்னியாவின் விளிம்பில் மிகச்சிறிய கீறல் செய்யப்பட்டு, கண்ணின் உள்ளே ஒரு மெல்லிய ஆய்வு செருகப்படுகிறது. அல்ட்ராசவுண்ட் அலைகள் இந்த ஆய்வு மூலம் அனுப்பப்படுகின்றன. இந்த அலைகள் உங்கள் கண்புரையை உடைக்கிறது. பின்னர் துண்டுகள் உறிஞ்சப்படுகின்றன. உங்கள் லென்ஸின் காப்ஸ்யூல் செயற்கை லென்ஸை வைப்பதற்கான ஏற்பாடு செய்யப் பின் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையில், சற்று பெரிய வெட்டு செய்யப்படுகிறது. உங்கள் லென்ஸின் உட்கருவை அகற்ற அறுவை சிகிச்சை கருவிகள் வெட்டு வழியாகச் செருகப்படுகின்றன, பின்னர் லென்ஸின் மீதமுள்ள கார்டிகல் மேட்டர் உறிஞ்சப்படுகிறது. செயற்கை லென்ஸ் பொருத்துவதற்கு லென்ஸின் காப்ஸ்யூல் பின்னால் விடப்படுகிறது. இந்த நுட்பத்திற்கு தையல் தேவைப்படலாம்.

கண்புரை அகற்றப்பட்ட பிறகு, ஐஓஎல் அல்லது உள்விழி லென்ஸ் எனப்படும் செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது. இந்த லென்ஸ் சிலிகான், பிளாஸ்டிக் அல்லது அக்ரிலிக் ஆகியவற்றால் செய்யப்படலாம். சில ஐஓஎல்கள் புற ஊதா ஒளியைத் தடுக்கின்றன, மற்றவை மல்டிஃபோகல் அல்லது ட்ரைஃபோகல் லென்ஸ் என அழைக்கப்படும் அருகிலுள்ள மற்றும் தொலைதூர பார்வை திருத்தத்தை வழங்குகின்றன.

அங்கே ஒரு ஃபெம்டோசெகண்ட் லேசர் தொழில்நுட்பம் கண்புரை அறுவை சிகிச்சையில் உதவி கிடைக்கும். லேசர் உதவியுடன் சிறிய வெட்டு செய்யப்பட்டு, லென்ஸின் முன் காப்ஸ்யூல் அகற்றப்படுகிறது. இருப்பினும், ஃபெம்டோ லேசர் தொழில்நுட்பம் மூலம், எங்களால் இன்னும் முழு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. அறுவைசிகிச்சையின் சில ஆரம்ப பகுதிகளில் மட்டுமே இது உதவும், அதன் பிறகு உண்மையான மேகமூட்டமான லென்ஸை அகற்ற ஃபாகோஎமல்சிஃபிகேஷன் இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.  

உங்கள் கண் நிபுணர், உள்ளூர் மயக்க மருந்து சொட்டுகளைப் பயன்படுத்தி உங்கள் கண்களை உணர்ச்சியடையச் செய்வார். இது உங்கள் கண்களை உணர்ச்சியற்றதாக ஆக்குகிறது, இதனால் செயல்முறையின் போது நீங்கள் வலியை உணர மாட்டீர்கள்.

இந்த அறுவை சிகிச்சையில், மேகமூட்டமான லென்ஸ் அகற்றப்பட்டு, லென்ஸின் அதே காப்ஸ்யூலில் ஒரு புதிய உள்விழி லென்ஸுடன் (IOLs) மாற்றப்படுகிறது.

ஆலோசனை

கண் பிரச்சனையை அலட்சியப்படுத்தாதீர்கள்!

இப்போது ஆன்லைன் வீடியோ ஆலோசனை அல்லது மருத்துவமனை சந்திப்பை முன்பதிவு செய்வதன் மூலம் எங்கள் மூத்த மருத்துவர்களை அணுகலாம்

இப்போதே சந்திப்பை முன்பதிவு செய்யுங்கள்

கண்புரை அறுவை சிகிச்சை பற்றி மேலும் வாசிக்க