வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்
கண்புரை என்பது கண்ணின் லென்ஸில் வெள்ளை படிந்து, மங்கலான பார்வையை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும். வயதானவர்களுக்கு இது பொதுவானது என்றாலும், காயங்கள், மருத்துவ நோய்கள் அல்லது யூவி கதிர்வீச்சு வெளிப்பாடு போன்ற காரணங்களாலும் ஏற்படலாம்.
கண்புரை அறிகுறிகளில் வெள்ளை படிதல் அல்லது மங்கலான பார்வை, ஒளி உணர்திறன், இரவில் பார்வை மோசமடைதல், மங்கிய அல்லது மஞ்சள் நிறமடைதல், விளக்குகளைச் சுற்றி ஒளிவட்டம் தெரிதல் மற்றும் ஒரு கண்ணில் இரட்டை பார்வை ஆகியவை அடங்கும்.
சூழ்நிலை மற்றும் உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப, கண் மருத்துவர் மயக்க மருந்தாக கண் சொட்டு மருந்தையோ அல்லது மயக்க ஊசியையோ பயன்படுத்த முடிவு செய்வார்கள்.
கண்புரை அறுவைச் சிகிச்சை செலவு, தேர்ந்தெடுக்கப்படும் அறுவை சிகிச்சை முறை, intraocular lens-இன் தரம் மற்றும் உங்கள் காப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில் மாறுபடும். இந்தச் செலவு பொதுவாக ரூ.10,000 முதல் ரூ.2,00,000 வரை இருக்கலாம்.
பெரும்பாலான காப்பீட்டு திட்டங்கள் அறுவைச் சிகிச்சையை உள்ளடக்கியவையாக உள்ளன, ஆனால் சில லென்ஸ் விருப்பங்கள் கூடுதல் செலவுகளை ஏற்படுத்தலாம். முழுமையான செலவைக் குறித்து தெளிவாக அறிய, தயவுசெய்து எங்களை தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் வருகையை விரைவில் முன்பதிவுசெய்யவும்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், வட்டி இல்லாத EMI வசதி மற்றும் 100% கட்டணமில்லா அறுவைச் சிகிச்சை ஆகியவை வழங்கப்படுகின்றன