Blog Media Careers International Patients Eye Test
Request A Call Back

ரிஃபிராக்டிவ் அறுவை சிகிச்சை

அறிமுகம்

ரிஃபிராக்டிவ் (ஒளிவிலகல்) அறுவை சிகிச்சை என்றால் என்ன?

கண்ணின் ஒளிவிலகல் பிழையை (பார்வைக்கோளாறு) சரிசெய்ய செய்யப்படும் சிகிச்சைதான் ரிஃபிராக்டிவ் அறுவை சிகிச்சை என்பதாகும். கண்ணாடியையும் காண்டாக்ட் லென்ஸ்களையும் சார்ந்திருக்கும் தன்மையை குறைக்க (அ) கண்ணாடி போடுவதை தவிர்க்க இச்சிகிச்சை செய்யப்படுகிறது. 18-21 வயதைத் தாண்டிய, நிலையான ஒளிவிலகல் (கண்ணாடியின் பவர்) இருக்கும் நோயாளிக்கு இந்த அறுவை சிகிச்சையை செய்யலாம். அனைத்து நோயாளிகளும் முழு மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாவதும் கண் பரிசோதனை செய்து கொள்வதும் கட்டாயமாகும். கார்னியல் டோபோகிராஃபி (corneal topography) (பென்டகேம் (Pentacam), ஆர்ப்ஸ்கேன் (Orbscan)) மற்றும் ASOCT போன்ற சிறப்பு பரிசோதனைகளை செய்தால்தான் கண்ணின் வடிவம், தடிமன், கார்னியாவின் வளைவுத்தன்மை மற்றும் கண்ணின் பிற பரிணாமங்களை துல்லியமாக மதிப்பிட முடியும். எல்லா விவரங்களும் கிடைத்த பின்னர் நோயாளிக்கு ரிஃபிராக்டிவ் அறுவை சிகிச்சை செய்வதற்கான பல்வேறு தேர்வுகளை ஆராய்ந்து சரியான ஒரு முடிவை கண் அறுவை சிகிச்சை நிபுணர் (கண் மருத்துவர்) எடுப்பார்.

தற்போதுள்ள ரிஃபிராக்டிவ் அறுவை சிகிச்சை முறைகளை கார்னியல் அறுவை சிகிச்சை மற்றும் லென்ஸ்-சார்ந்த அறுவை சிகிச்சை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

கார்னியல் (Corneal) அறுவை சிகிச்சை முறையில் லேசரின் துணை கொண்டு கண்கோளாறு சரிசெய்யப்படுகிறது; இதையும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

  1. PRK – (ஃபோட்டோ-ரிஃராக்டிவ் கெராடெக்டமி - Photrefractive Keratectomy)

    கார்னியல் அறுவை சிகிச்சை முறையில் முதலில் கார்னியாவின் மேலடுக்கை (எபிதீலியம்) மிகுந்த கவனத்துடன் அகற்ற வேண்டும்; இதன் பின்னர் 193 nm அலைநீளமுடைய எக்ஸைமர் லேசரால் கார்னியல் பரப்பின் வடிவத்தை திருத்தியமைத்து கண்ணின் ஒளிவிலகல் சக்தியை திருத்தலாம். கண் ஆறும் நிகழ்முறைக்கு உதவுவதற்காக சிலநாள் வரை காண்டாக்ட் லென்ஸ் வைக்கப்படுகிறது. 50 மைக்ரான் அளவில் மிக மெல்லியதாக இருக்கும் எபிதீலியம் இயல்பான நிலையில் 3 நாட்களுக்குள் திரும்பவும் வளர்ந்து விடும்.

  2. லாசிக் (LASIK) (ஃப்ளாப் (Flap) சார்ந்த செய்முறை)

    மிகவும் புகழ்பெற்ற இச்செய்முறையில் கார்னியாவின் மேலோட்டமான அடுக்கில் 100-120 மைக்ரான் அளவில் ஒரு ஃபிளாப் உருவாக்கப்படுகிறது. இந்த ஃபிளாப் இரண்டு விதமாகவும் உருவாகலாம்:

    • Microkeratome :

      This a small specialised blade that dissects the flap at the accurate depth, hence Microkertome assisted லேசிக் is also known as BLADE LASIK

    • ஃபெம்டோசெகண்ட் லேசர் (Femtosecond Laser) (அலைநீளம் 1053 nm):

      தேவையான ஆழத்தில் ஃபிளாப்பை துல்லியமாக உருவாக்கும் அதியற்புதமான லேசர் இது. மேலே குறிப்பிட்டப்பட்ட எக்ஸைமர் முறையை விட மிக வித்தியாசமான செய்முறையான இதைச் செய்வதற்கு தனியான ஒரு மெஷின் தேவைப்படும். ஃபெம்டோசெகண்ட் லேசர் துணையுடன் செய்யப்படும் லாசிக் சிகிச்சையை 'ஃபெம்டோ-லாசிக்' (FEMTO - LASIK) முறை என்றும் கூறலாம். 
      மேற்சொன்ன இரு முறைகளில் ஏதாவதொரு முறையைப் பின்பற்றி ஃபிளாப்பை உருவாக்கிய பின்னர் அதைத் தூக்கி அதன் கசடை எக்ஸைமர் லேசாரால் (PRK முறையில் பயன்படுத்தப்படும் அதே லேசர்) சுத்திகரிக்கலாம். இச்செய்முறை முடிந்தவுடன் ஃபிளாப்பை திரும்பவும் அதே இடத்தில் (கார்னியல் பெட்) வைத்து மருந்துகளை தந்து நோயாளியை டிஸ்சார்ஜ் செய்து விடலாம்.

  3. ரிஃபிராக்டிவ் லெண்டிக்யுல் எக்ஸ்ட்ராக்ஷன் - ReLEx® ஸ்மைல் (SMILE) /ஃப்ளெக்ஸ் (FEX) - (Refractive Lenticule Extraction)

    இருப்பதிலேயே மிகவும் மேம்பட்ட ரிஃபிராக்டிவ் சிகிச்சை முறையான இதில் ஃபெம்டோசெகண்ட் லேசர் ('ஃபெம்டோ-லாசிக்' (FEMTO-LASIK) முறையில் பயன்படுத்தப் படுவது) மட்டுமே இருந்தாலே போதுமானது. ஃபெம்டோசெகண்ட் லேசரால் கார்னியாவின் அடுக்குகளுக்குள் ஒரு லெண்டிக்யுலை உருவாக்கி (இதன் அளவும் தடிமனும் முன்னரே முடிவு செய்யப்பட்டிருக்கும்) கண்ணின் ஒளிவிலகல் சக்தியானது சரிசெய்யப்படுகிறது. இந்த தி லெண்டிக்யுலை இரு விதங்களில் பிரிக்கலாம்:

    • 4-5 மிமீ நீளமான கீறல் - இதுதான் ஃபெம்டோசெகண்ட் லெண்டிக்யுல் எக்ஸ்ட்ராக்ஷன் (FLEX - Femtosecond Lenticule Extraction) எனப்படுகிறது.

    • மிகச்சிறிய 2 மிமீ நீளமான கீறல் - இதுதான் ஸ்மால் இன்சிஷன் லெண்டிக்யுல் எக்ஸ்ட்ராக்ஷன் (SMILE - Small Incision Lenticule Extraction) எனப்படுகிறது.

    லெண்டிக்யுலை பிரித்து எடுக்கும்போது கார்னியாவின் வடிவம் மாறுவதுடன் கண்ணின் ஒளிவிலகல் சக்தியும் சரிசெய்யப்படுகிறது. இவ்வகை அறுவை சிகிச்சைக்கு எக்ஸைமர் லேசர், மைக்ரோகெரடோம் பிளேடு அல்லது ஃபிளாப் ஆகியவை தேவைப்படாது; எனவே இச்சிகிச்சை முறையானது பிளேடு இல்லாத, ஃபிளாப் இல்லாத ரிஃப்ராக்டிவ் அறுவை சிகிச்சை என்றழைக்கப்படுகிறது. 

 

லென்ஸ் சார்ந்த அறுவை சிகிச்சை முறைகள்

லென்ஸ்-சார்ந்த அறுவை சிகிச்சை முறைகளில் 'கண்ணுக்குள் வைக்கப்படும் இன்டரா-ஆகுலர் (intraocular)' செய்முறையால் கண்பார்வைக் கோளாறை சரிசெய்து விடலாம். இதையே பின்வரும் வகைகளாகவும் பிரிக்கலாம்: 

இம்பிளாண்டபிள் கொல்லமார் லென்ஸ் (ICL - Implantable Collamer Lens) 

இவ்வகை அறுவை சிகிச்சையில் கண்ணுக்குள் இருக்கும் இயல்பான க்ரிஸ்டலைன் லென்ஸின் முன்புறத்தில் இம்பிளாண்டபிள் காண்டாக்ட் லென்ஸ் (ICL) வைக்கப்படும். நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் டிஸ்போஸபிள் காண்டாக்ட் லென்ஸை விட கொல்லமார் (கொலாஜென் (collagen) + பாலிமர் (polymer) கலந்த கலவை) எனப்படும் உயிரிணக்கப் பொருளால் உருவாக்கப்படும் ICL லென்ஸ்கள் மிக வித்தியாசமானவை.

 

ரிஃபிராக்டிவ் லென்ஸ் மாற்றுதல்

ரிஃபிராக்டிவ் லென்ஸ் மாற்றுதல்: கண்ணிலுள்ள க்ரிஸ்டலைன் லென்ஸ் (crystalline lens) அகற்றப்பட்டு அதற்கு பதிலாக செயற்கையான இன்ட்ரா-ஆகுலர் லென்ஸ் (IOL - artificial intraocular lens) வைக்கப்பட்டு கண்கோளாறு சரிசெய்யப்படுகிறது. இச்சிகிச்சையின்போது அல்ட்ராசானிக் ஆற்றலால் (Phacoemulsification) கண்ணின் இயற்கையான லென்ஸ் அகற்றப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமே இராது. ரிஃபிராக்டிவ் லென்ஸ் எக்ஸ்சேஞ்ச் முறையில் ஃபெம்டோசெகண்ட் லேசரையும் பயன்படுத்தலாம். இதைத்தான் பரவலாக ரோபோடிக்- ரிஃபிராக்டிவ் லென்ஸ் எக்ஸ்சேஞ்ச் (ROBOTIC - Refractive Lens Exchange) என்று கூறுகின்றனர். 

ரிஃபிராக்டிவ் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகும் அனைத்து நோயாளிகளுக்கும் முதலில் ஆன்டிபயாடிக்-ஸ்டெராய்டு (antibiotic–steroid) கலந்த ஐ-ட்ராப்கள் விடப்பட்டு பின்னர் பாதுகாப்புக்கான கண்ணாடிகளும் தரப்படுகின்றன. வழக்கமான தொடர் சிகிச்சையுடன் கூட அறுவை சிகிச்சை முடிந்த 1, 3, 7 மற்றும் 14-ஆவது நாட்களில் நோயாளிகளை உடல் பரிசோதனை செய்வது அவசியம்.

ஆலோசனை

கண் பிரச்சனையை அலட்சியப்படுத்தாதீர்கள்!

இப்போது ஆன்லைன் வீடியோ ஆலோசனை அல்லது மருத்துவமனை சந்திப்பை முன்பதிவு செய்வதன் மூலம் எங்கள் மூத்த மருத்துவர்களை அணுகலாம்

இப்போதே சந்திப்பை முன்பதிவு செய்யுங்கள்

லேசிக் பற்றி மேலும் வாசிக்க